யாழ்.வடமராட்சி பிரதேசத்திலுள்ள மணல்காட்டுப் பகுதியில் சிங்கள மக்கள் குடியேற்றப்படலாம் என்று பொற்பதி கடல் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் அச்சம் தெரிவித்துள்ளது.
அக்கூட்டுறவுச் சங்கம் இது தொடர்பாக ஊடகங்களுக்கு தெரிவித்திருப்பது வருமாறு:-
“யாழ்.வடமராட்சி மணல்காட்டுப்பகுதியில் நாளுக்கு நாள் சிங்கள கடல் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனால் இப்பகுதி தமிழ் கடல் தொழிலாளர்களின் வளம் சுரண்டப்படுகிறது. எதிர்காலத்தில் சிங்கள் மக்களின் குடியேற்றத்துக்கு இது வழி வகுத்து விடும் என்றும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இக்கடல் பகுதியில் கடலட்டை பிடிக்கின்றமைக்கு 25 சிங்கள மீனவர்களுக்கு மாத்திரம் கடந்த சில மாதங்களுக்கு முன் கடற்றொழில் அமைச்சு அனுமதி வழங்கியிருந்தது இப்பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கு கடலட்டை பிடிக்கும் தொழிலை கற்றுக் கொடுக்கின்றமைக்காகவே இவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது எனவும் சில காலங்களின் பின்னர் இவர்கள் திரும்பிச் சென்று விடுவார்கள் எனவும் கடல் தொழில் அமைச்சு அப்போது தெரிவித்திருந்தது.
ஆனால் தற்போது 400 இற்கும் அதிகமான சிங்கள கடல் தொழிலாளர்கள் இப்பகுதியில் கடலில் அட்டை, மீன் ஆகியவற்றைப் பிடிக்கின்றமையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் படகுகளை கூட தென்பகுதியில் இருந்து கொண்டு வந்து சேர்த்துள்ளனர். இது தவிர இக்கடல் பகுதியில் உள்ள சங்கு உள்ளிட்ட கடல் வளங்களை அள்ளிக்கொண்டு போகின்றனர். இதனால் வெகுவிரைவில் இப்பகுதியின் வளங்கள் அழியும் நிலையும் காணப்படுகின்றது.”

No comments:
Post a Comment