Tuesday, October 19, 2010

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை உடைத்து வெற்றி காண்போம் : வைகோ

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை உடைத்து வெற்றி காண்போம் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கூறினார் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.திருமண நிகழ்வொன்றில் பேசியதாகக் குறிப்பிடப்படும் அந்தச் செய்தியில்,
“ம.தி.மு.க. எந்தத் தடங்கல், தடைகள் வந்தாலும் தகர்த்து எறியும். இது நெருப்பில், தியாகத்தில் பிறந்த இயக்கம்.
அண்ணாவின் கொள்கை, லட்சியத்தைக் காக்கும் இயக்கம். 1993இல் நான் தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டேன். எதிர்காலத்தில் திராவிடத்தின் காவலர்கள் ம.தி.மு.கவினர் என்று சரித்திரம் சொல்லும்.
பண்பாடு, கலாசாரத்தில் உலகத்திற்கே தமிழகம் முன்னோடியாக திகழ்ந்துள்ளது. ஆனால் இன்று மது போதையில் தமிழகம் தள்ளாடுகிறது. மேல் நாட்டு கலாசாரத்தின் பிடியில் சிக்கி சீரழிகிறது. சென்னை மாநகரம் ஐரோப்பா நகரங்களை விட மோசமாகி விட்டது.
கேளிக்கை விடுதிகள் இளைஞர்கள், இளம் பெண்களின் வாழ்வைச் சீரழிக்கிறது. திருமணம் மணமுறிவில் முடிகிறது. ம.தி.மு.க.வுக்காக உழைத்தவர்களையும், காத்தவர்களையும் ம.தி.மு.க. என்றும் மறக்காது.
இந்த மணக்களுக்கு எதிர்காலத்தில் ஒளிமயமான எதிர்காலம் இருப்பதுபோல ம.தி.மு.க.வுக்கும் எதிர்காலம் உண்டு. விடுதலைப்புலிகள் மீதான தடையை உடைப்பதிலும் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment