சிங்கள மொழியில் ஸ்ரீலங்கா தேசிய கீதம் இசைக்க எதிர்ப்பு தெரிவித்தவர் என்பதால் சுட்டு கொல்லப்பட்டார் இதுவே உண்மை கொள்ளை என்ற பெயரில் பலபேர் இப்படி பலி வாங்கப்படுகிறார்கள் என்பது உண்மையே கரிகாலனின் புலனாய்வு செய்தியாளர்
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது நேற்று மாலை வான் ஒன்றில் வந்த ஆயுததாரிகள் அவரினைச் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது. எனினும் அவரது மகளின் நகைகளை அங்கு வந்தவர்கள் கேட்டதாகவும் மகள் கூக்குரலிட்டபோது அங்கு வந்த தந்தையை ஆயுததாரிகள் சுட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அண்மைக் காலமாக திருடர்கள் என்ற போர்வையில் ஆயுததாரிகள் அவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்டு தங்களின் முயற்சிகளை திசைதிருப்பும் புதிய உத்தியை கையாண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான முயற்சியிலேயே அண்மையில் சங்கானையில் ஆலய குருக்களும் அவரது புதல்வர்களும் சுடப்பட்டதாக தெரியவருகிறது
No comments:
Post a Comment