Sunday, October 17, 2010

விடுதலைப் புலிகள் நோர்வே, கனடா போன்ற நாடுகளிலிருந்து இயங்க முனைப்பு – ரொஹான் குணரட்ன

தமிழீழ விடுதலைப் புலிகள் நோர்வே, கனடா போன்ற நாடுகளிலிருந்து இயங்குவதற்கு முனைப்பு காட்டி வருவதாக பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான நிபுணர் பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.
எஞ்சியுள்ள விடுதலைப் புலி தலைவர்களும், உறுப்பினர்களும் மீள இயங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் இலங்கை அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நோர்வேயில் இயங்கி வரும் நெடியவனை கைது செய்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நெடியவனை நாடு கடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் நெடியவனுக்கு தொடர்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
நெடியவன் பயிற்சி பெற்ற ஓர் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் நெடியவனை கைது செய்வதற்கான வழிமுறைகள் காணப்படுவதாகவும், இதற்கான முனைப்புக்காளை அரசாங்கம் உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நோர்வே அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆம்பிக்க வேண்டுமென அர் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment