Thursday, October 21, 2010

தலைவர் இணையத்தில் தோன்றுகின்றார் என்று தமிழகம் முழுவதும் இன்று வதந்தி!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று இந்தியாவின் தமிழக மாநிலம் எங்கும் இன்று திடீர் பரபரப்பு ஒன்று ஏற்பட்டது. 
பிரபாகரன் உயிருடன் காட்டுப் பகுதி ஒன்றில் நடமாடும் நேரடி வீடியோ காட்சிகள் இணையத் தளம் ஒன்றின் மூலமாக ஒளிபரப்பப்படுகின்றன என்று கதை ஒன்று பரவலாக அங்கு உலாவியது.
அடர்ந்த தீவு போன்ற பகுதி ஒன்றில் பிரபாகரன் சுற்றி வருகின்றார் என்றும் தாடியுடன் காணப்படுகின்றார் என்றும் ஒளிபரப்பப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டது. இதனால் இன்ரநெட் கபேகள் தோறும் ஆட்கள் வகை தொகை இன்றிக் குவிந்தனர்.
குறிப்பாக திருச்சியில் கபேக்கள் நிரம்பி வழிந்தன. ஆனால் இணையங்களில் பார்வையிட்டவர்கள் அப்படி எதுவும் ஒளிபரப்பப்படவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment