அவுஸ்திரேலியாவை நோக்கி கடந்த 45 நாட்களாக பயணித்துக்கொண்டிருந்த போது மூன்று பேர் மரணம் அடைந்ததாக இந்தோனேசிய கடற்படையினரால் மீட்கப்பட்ட இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர் கிறிஸ்மஸ் தீவுக்கு பயணித்துக்கொண்டிருக்கையில் படகு எரிபொருள் இன்றியும் அதில் உள்ளவர்கள் உணவு மற்றும் நீர் இன்றியும் தத்தளித்து கொண்டிருந்த வேளையில் இந்தோனேசிய கடற்படையினரால் நேற்று காப்பாற்றப்பட்டனர். நீர் இன்மையால் தாம் மழை நீரையே பருகியதாக அகதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தநிலையில் தாம் பயணித்துக்கொண்டிருந்த போது கடலில் சென்றுகொண்டிருந்த மற்றும் ஒரு மீனவ கப்பலின் உதவியை கோருவதற்காக கடலில் நீந்தி சென்ற போது தம்முடன் வந்த இரண்டு ஆண்கள் மரணமடைந்ததாக அகதிகள் குறிப்பிட்டுள்ளனர். மற்றும் ஒரு பெண்ணும் படகு நிலைதடுமாறிய போது மரணமடைந்தார்.
காப்பாற்றப்பட்ட பெண்களில் ஒருவர் தமது புஜத்தில் குண்டு தாக்குதலின் காயம் இருப்பதை காண்பித்தார்.
இதனையடுத்தே தாமும் கணவரும் பிள்ளைகளும் வெளிநாட்டுக்கு செல்ல முடிவெடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மற்றும் ஒரு சிறுவன் தமது தந்தை குண்டு தாக்குதலில் மரணமடைந்த நிலையில் தாயுடன் படகில் வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த படகு இலங்கையின் மன்னாரில் இருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 வயதான ராஜவர்மன் என்பவரே படகை செலுத்தி சென்றுள்ளார். முதல் 15 நாட்கள் எவ்வித பிரச்சினைகளும் இன்றி தமது பயணம் தொடர்ந்ததாக குறிப்பிட்ட அவர் கிறிஸ்மஸ் தீவை அண்மித்து விட்டதாக நினைத்தபோதே படகு பழுதடைந்தாக குறிப்பிட்டுள்ளார்.
அடுத்து வந்த 30 நாட்களில் தாம் அனுபவித்த கஸ்டங்களை பார்க்கும் போது தாம் உயிர் பிழைப்போம் என நினைக்கவில்லை என இலங்கை அகதிகள் தெரிவித்துள்ளனர்.
இறுதியாக தாம் இந்தோனேசியாவின் பானாடியன் தீவை அடைந்தவுடன் அங்கிருந்து தேங்காய், பழங்கள் மற்றும் நத்தைகள் ஆகியவற்றை உட்கொண்டதாக அகதிகள் தெரிவித்துள்ளனர்
இதன்போதே தாம் இந்தோனேசிய கடற்படையினரால் காப்பாற்றப்பட்டதாக இலங்கை தமிழ் அகதிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை 88 பேரைக்கொண்ட மற்றும் ஒரு படகு கிறிஸ்மஸ் தீவுக்கு அப்பால் நேற்று முன்தினம் கைப்பற்றப்பட்டது.
னினும் இதில் ஈராக், ஆப்கானிஸ்தான் அகதிகளே இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment