Thursday, November 4, 2010

இலங்கை கடற்படையினரின் புதிய தாக்குதல் உத்தி தமிழக மீனவர்கள் மீது கல்வீச்சு கடற்படையினரின் அட்டூழியம்

மீன்பிடிப்பதற்காக கடலுக்குள் சென்ற பாம்பன் பகுதியைச்சேர்ந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் கல்வீசித் தாக்கியுள்ளனர்.

ராமேஸ்வரம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிப்பதற்காகச் சென்றுள்ளனர். அப்போது அங்கு திடீரென வந்த இலங்கைக் கடற்படையினர், தமிழக மீனவர்கள் வைத்திருந்த மீன்பிடி வலைகளைப் பிடுங்கி பிய்த்து எறிந்துள்ளனர்.

மேலும், கப்பலில் அவர்கள் வைத்திருந்த கற்களை எடுத்து, மீனவர்களின் மீது எறிந்துள்ளனர். இப்படி கற்களை வீசித் தாக்குதல் நடத்தியிருப்பது புதிது என்றும், அதிர்ச்சி தரத் தக்கது என்றும் தமிழக மீனவர்கள் கூறுகின்றனர்.

இதேபோல்,  நேற்று முன் தினம் இரவு தனுஷ்கோடி அருகே கடலுக்கு சென்ற ராமேஸ்வர மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீன் பிடிக்கவிடாமல் விரட்டி அடித்தனர். மீனவர்களின் வலைகளை அறுத்து அதனை எடுக்கவிடாமல் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கடந்த சில மாதங்களாகவே தமிழக மீனவர்கள், குறிப்பாக ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்குதலுக்கு உள்ளாவது அதிகரித்து வருகிறது. அதிலும் இப்போது புதிதாக கல்வீச்சுக்கு தாக்குதலுக்கு ஆளாவது முதன்முறையாகும்.

No comments:

Post a Comment