Thursday, November 4, 2010

"மீண்டும் வருவோம் மீண்டும் எழுவோம்" என்கிற தலையங்கத்தில் யாழில். தமிழீழ விடுதலைப் புலிகளின் எல்லாளன் படையின் எச்சரிக்கைக் கடிதங்கள்!

“மீண்டும் வருவோம் மீண்டும் எழுவோம் ”; என்ற தலையங்கத்தில் தழிழீழ விடுதலைப்புலிகளின் “எல்லாளன் படை” யினால் எச்சரிக்கை கடிதமொன்று யாழ்ப்பாணத்திலுள்ள பெரும்பாலான சனசமூக நிலையங்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தழிழீழ விடுதலைப்புலிகளின் உத்தியோக பூர்வ கடித தாளில் கறுப்பு வெள்ளை நிறத்தில் கணணியில் பிரதியெடுக்கப்பட்டு இக்கடிதங்கள் அனுப்புவரின் முகவரி இல்லாமல் முத்திரயிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ன.

இவ்வெச்சரிக்கை கடிதங்கள் சனசமூக நிலையங்களுக்கு நிலையத் தலைவர்களின் வீடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சமூகச்சீரழிவுகள் இளைஞர்களின் அட்டகாசங்கள் சீரழிவு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற பெண்களின் நடவடிக்கைகளுக்கான எச்சரிப்புக்கள் இராணுவத்தினர் மற்றும் சிங்களவர்களின் சமூகச்சீரழிவுகளுக்கு துணைபோகின்ற தமிழர்களுக்கான எச்சரிப்பு மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்கு துணை போகின்றவர்களுக்கான எச்சரிப்பு மற்றும் வன்னிப்போரின் போது இடம்பெற்ற இராணுவப்படுகொலைகள் வன்முறைகள் என்பன அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

மேலும் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் உடனடியாக இவற்றை நிறுத்தாவிட்டால் தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதுடன் நாம் மீண்டும் விரைவில் வருவோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கடித்தினால் பலர் பீதியடைந்துள்ளதுடன் தமது பகுதி இராணுவ படைத்தலைமையகங்களுக்கும் இக்கடித்ததை நேரில் கொண்டுசென்று கொடுத்துள்ளனர் என்றும் தெரிய வருகின்றது.

இதனால் உஷாரடைந்த இராணுவத்தினர் பல இடங்களில் திடீர் திடீரென இராணுவ முகாம்களை அமைத்து வருகின்றனர். இராணுவப்புலனாய்வுப்பரிவினரும் ஒட்டுக்குழுக்களின் பிரதி நிதிகளும் இவ்விடயம் சம்பந்தமாக இளைஞர்களிடம் இரகசிய விசாரணைகளையும் மேற்கொண்டு வருகினறனர்.

No comments:

Post a Comment