இலங்கை அரசாங்கம் தொடர்பாக சர்வதேச நாடுகளில் ஏற்பட்டுள்ள அபகீர்த்தியை மாற்றி போருக்குப் பின்னரான சிறிலங்காவின் நன்மதிப்பை உயர்த்துவதற்காக, பிரித்தானியாவின் பரப்புரை நிறுவனம் ஒன்றுக்கு சுமார் மூன்று மில்லியன் பவுண்ஸை இலங்கை அரசாங்கம் செலுத்துவதாக பி.பி.சி. செய்தி நிறுவனம் செய்தி வெளி யிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மத்தியில் இலங்கை தொடர்பிலான நற்பெயரை ஏற்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் பிரித்தானியாவில் பெல் பொட்டிங்கர் குறூப் என்ற பரப்புரை நிறுவனத்தை பணிக்கு அமர்த்தியுள்ளதாக பி.பி.சி. தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட் டுள்ள இலங்கை அரசாங்கம், தமது அரசாங்கத்தினதும் மக்களினதும் நலன்கள் கருதி பலபரப்புரை நிறு வனங்களை பணிக்கு அமர்த்தி யுள்ளதாக குறிப்பிட்டுள்ள போதி லும் அந்த நிறுவனங்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை. அதேபோன்று பெல் பொட்டிங் கர் குறூப் என்ற பரப்புரை நிறுவன மும் இது குறித்த விபரங்களை வெளியிட மறுப்புத் தெரிவித்துள்ளது. வன்னியில் கடந்த வருடம் இடம் பெற்ற போரின்போது படையினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங் கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப் பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்கள் சர்வதேச விசா ரணைகளை மேற்கொள்ள வேண் டும் என கோரிக்கை விடுத்திருந்தன.
அத்துடன் உள்நாட்டில் ஊடக சுதந்திரம் நசுக்கப்படுவதாகவும் மனிதவுரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாகவும் சர்வதேச நாடுகள் இலங்கை அரசுக்கு எதிராக குற்றம் சுமத்தியிருந்தன. சர்வதேச சமூகத்தில் ஏற்பட்ட அவப் பெயரை மாற்றும் ஒரு நோக்குட னேயே பிரித்தானியாவின் பெல் பொட்டிங்கர் குறூப் என்ற பரப்புரை நிறுவனத்தை பணிக்கு அமர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவுக்கு கடந்த வாரம் விஜயம் செய்த வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் விஜயத் தின் போதும் இக் குறிப்பிட்ட நிறுவனம் இலங்கை சார்பில் பரப்புரைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன்,நிபுணர்கள் குழுவை நிய மிக்க முற்பட்ட வேளையில் அதனைத் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் இந்த நிறுவனத்தை நாடியதாகவும் தெரியவருகின்றது.
No comments:
Post a Comment