Saturday, October 23, 2010

ஒரு நாளைக்கு அரைக்கிலோ மண்ணை சாப்பிடும் விசித்திர மனிதன்

நாளுக்கு நாள் மண் திண்ணும் ஆர்வம் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை' என, ஒரு நாளைக்கு அரை கிலோ மண்ணை சாப்பிடும் காய்கறி கடை வியாபாரி கூறினார். விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்த வாலி மகன் கோபி(25); காய்கறி வியாபாரி.

மூன்று வயதில் மண்ணை சாப்பிட ஆரம்பித்தவர் தற்போது 25 வயதிலும் மண் சாப்பிட்டு வருகிறார். இடையில் களிமண், ஆற்று மணல் போன்றவற்றையும் ருசித்து சாப்பிட்டு வருகிறார். தினமும் அரை கிலோவுக்கு மேலாக மண்ணை உணவாக உட்கொள்கிறார்.

எப்போது பார்த்தாலும் இவர் பேண்ட் பாக்கெட்களில் குறைந்த பட்சம் கால் கிலோவிற்கு மண்ணை சேமித்து வைத்து நாள் முழுவதும் சாப்பிட்டு வருகிறார். மணலை சாப்பிடும் போது மணலில் பெரிய கற்கள் இருந்தால் மட்டும் முடிவில் அவற்றை கீழே துப்பிவிடுகிறார்.

ஏரி களி மண்ணை மிகவும் விரும்பி சாப்பிடுகிறார். இது குறித்து அவர் கூறுகையில், "சிறு வயதில் இருந்து மண்ணை உணவாக சாப்பிடும் பழக்கம் உள்ளது. சிறு வயதில் குறைவான மண்ணை சாப்பிட்டு வந்தேன். பின், தினமும் அதிகமான மண்ணை சாப்பிட்டு வருகிறேன்.

இதனால் எனது உடம்பிற்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டதில்லை. மேலும், மண்ணை சாப்பிடுவதால் இயற்கை உபாதைகளிலும் இதுவரை எந்த பிரச்னையும் இல்லை. எனக்கு நாளுக்கு நாள் மண் சாப்பிடும் ஆர்வம் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை' என, மண்ணை சாப்பிட்டு கொண்டே கூலாக

No comments:

Post a Comment