Saturday, October 23, 2010

யாழ். நூலகத்தை நேற்று மாலை முற்றுகையிட்ட தெற்கு உல்லாசப் பயணிகள் அடாவடியில் ஈடுபட்டதால் நகரில் பரபரப்பு

தென்னிலங்கையில் இருந்து வந்த உல்லாசப் பயணிகள் யாழ். நூலகத்தை முற்றுகையிட்டு உள்ளே நுழையப் போவதாக அடாவடித் தனத்தில் ஈடுபட்டதால் நேற்று மாலை யாழ். நகரப் பகுதியில் பதற்றம் பரவியது. இலங்கை மருத்துவர் சங்கமும் யாழ்ப்பாண மருத்துவர் சங்கமும் இணைந்து நடத்திய வரு
யாழ். நூலகத்தை நேற்று மாலை முற்றுகையிட்ட தெற்கு உல்லாசப் பயணிகள்  அடாவடியில் ஈடுபட்டதால் நகரில் பரபரப்பு

யாழ்ப்பாணம், ஒக்.24
தென்னிலங்கையில் இருந்து வந்த உல்லாசப் பயணிகள் யாழ். நூலகத்தை முற்றுகையிட்டு உள்ளே நுழையப் போவதாக அடாவடித் தனத்தில் ஈடுபட்டதால் நேற்று மாலை யாழ். நகரப் பகுதியில் பதற்றம் பரவியது.
இலங்கை மருத்துவர் சங்கமும் யாழ்ப்பாண மருத்துவர் சங்கமும் இணைந்து நடத்திய வருடாந்த மாநாடு யாழ். நூலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது. இதனால் நூலகத்திற்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று நிர்வாகத்தினர் அறிவித்திருந்தனர். இது தொடர்பான அறிவித்தல் பதாகைகள் நூலகத்தில் மாட்டப்பட்டிருந்தன.வழக்கமாக மாலை 4.30 மணி முதல் 6.30 மணிவரைக்கும் பார்வையாளர்கள் நூலகத்தின் உள்ளே அனுமதிக்கப்படுவர். குறிப்பிட்ட நேரத்தில் பெருந்தொகையான தென்னிலங்கைச் சுற்றுலாப் பயணிகள் நூலகத்திற்கு வந்திறங்கினர்.
36 பஸ்களில் வந்திறங்கிய நூற்றுக்கணக்கானவர்களும் தாம் நூலகத்திற்குள் சுற்றிப் பார்க்க வேண்டும் என்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய காவலர் இன்றைய தினம் (நேற்று) பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்தனர்.
இதனை அடுத்து அங்கு முறுகல் நிலை ஏற்பட்டது. தென்னிலங்கைவாசிகள் தாம் உள்ளே போயே ஆகவேண்டும் என்று அடாவடியில் ஈடுபட்டனர். காவலர் தெரிவித்த காரணங்கள் எவற்றையும் அவர்கள் செவிமடுப்பதற்குத் தயாராக இல்லை.
அங்கு எழுதித் தொங்கவிடப்பட்டிருந்த பதாகைகளைக் கிழித்தெறிந்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அருகில் இருந்த யாழ். பொலிஸ் நிலையத்தில் இருந்து பொலிஸ் உயரதிகாரி உட்பட பொலிஸார் வந்தனர். அவர்களைப் பார்த்த அங்கிருந்த ஒருவர் ""நான் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வந்திருக்கிறேன். இதில் நீங்கள் தலையிட்டால் விளைவுகளைச்          சந்திக்க வேண்டி வரும்'' என மிரட்டினார் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொலிஸார் பின்வாங்கினர். சம்பவ இடத்திற்கு வந்த படையினரும் வளாவிருந்தனர்.
யார் வந்தாலும் தாம் நூலகத்திற்குள் சென்றே தீரவேண்டும் என்று தென்னிலங்கைவாசிகள் விடாப்பிடியாக நின்றனர். இதனை அடுத்து நூலக நிர்வாகிகள் அவர்களுடன் பேச்சு நடத்தினர். அதேசமயம் பாதுகாப்புத் தரப்பினர் யாழ். மாநகர முதல்வருடன் தொடர்பு கொண்டு பேசினர். நிர்ப்பந்தங்களும் அழுத்தங்களும் அதிகரித்ததை அடுத்து மாலை 5.30 மணியளவில் தென்னிலங்கைவாசிகள் நூலகத்திற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக யாழ். பொது நூலகர் எஸ்.தனபாலசிங்கம் தெரிவித்ததாவது:
யாழ். பொது நூலகத்தில் மருத்துவச் சங்க மாநாடு நடைபெற்றதால் சுற்றுலாப் பயணிகளை உள்ளே அனுமதில்லை என முடிவெடுக்கப்பட்டிருந்தது. அது தொடர்பான அறிவித்தல் பதாகையும் வைக்கப்பட்டிருந்தது.
நேற்று மாலை நூலகத்திற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் தம்மை உள்ளே விடுமாறு வாயில் காவலர்களுடன் தகறாரில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அங்கு வந்த பொலீஸார், இராணுவத்தினர் இந்த விடயத்தில் தலையிட்டதனால் சுற்றுலாப் பயணிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்  என்றார்.
சம்பவம் குறித்து பலாலி படைத்தள ஊடகப் பிரிவு தெரிவித்தாவது:
மாத்தறை, காலியில் இருந்து வந்த உல்லாசப் பயணிகள் காலையில் நூலகத்துக்குச் சென்று நூலகத்தைப் பார்வையிடப் போவதாகக் கேட்டுள்ளனர். அவர்களை மாலையில் வருமாறு அங்கிருந்தவர்கள் கூறி உள்ளனர். அதன்படி மாலையில் சென்ற அவர்கள் உள்ளே நுழைய முடியாதவாறு நுழைவாயில் இழுத்து மூடப்பட்டிருந்தது. அங்கிருந்த காவலர் மக்கள் உள்ளே செல்வதற்கு அனுமதிக்கவில்லை.
மக்கள் அவருடன் வாக்குவாதப்பட்டனர். உடனே அவர்கள் தன்னைத் தாக்க முற்படுகின்றனர் என அவர் மாநகர முதல்வருக்குத் தகவல் கொடுத்தார். இதனை அறிந்த, உல்லாசப் பயணிகளுடன் வந்திருந்த உலக உணவுத் திட்ட அதிகாரி ஒருவர் எமக்கு அறிவித்தார்.
காவலர் சொன்ன விடயத்தில் உண்மை எதுவுமில்லை. பின்னர் அங்கு வந்த பொலிஸ் அதிகாரியும் படை அதிகாரியும் முதல்வருடன் தொடர்பு கொண்டதை அடுத்து பயணிகள் நூலகத்தைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்  என்றார். thank to uthayan

No comments:

Post a Comment